April 14, 2015

ஓமந்தையில் மண்ணெண்ணெய் பவுஸர் தடம்புரள்வு: வீணாகியதை ஏந்திய மக்கள்!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் மண்ணெண்ணெய் பவுஸர் ஒன்று தடம் புரண்டத்தில் அதில் இருந்த மண்ணெண்ணெய் அனைத்தும் வீணாகி மண்ணில் சேர்ந்துள்ளது.
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற மண்ணெண்ணெய் பவுஸரே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30
மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்ணெண்ணெய் பவுஸரில் இருந்து மண்ணெண்ணெய் வெளியேறியதனால் அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெயை தாம் எடுத்து வந்த பாத்திரங்களில் எடுத்துச் சென்றனர்.
சிலமணி நேரத்தின் பின்னர் கனரக வாகனத்தின் உதவியுடன் பவுஸர் வாகனம் மீட்கப்பட்டது.

No comments:

Post a Comment