பாப்லோ, வரைந்திருக்கிறாயா நீ
உன் கடைசி ஓவியத்தை?
உனது கடைசி ஓவியத்தின்
கடைசித் தீற்றலை உனக்குத் தெரியுமா?
பாப்லோ, நீ எழுதியிருக்கிறாயா உன்
கடைசிக் கவிதையை?
உனது கடைசிக் கவிதையின்
கடைசி வரியை உனக்குத் தெரியுமா?
குருதி சிந்தும் இதயமும்
அநாதரவான கருந்துளையுமே
அவனது கடைசி சாட்சி
கருணையைத் தானே இவன் யாசித்தான்
கடைசி ஓவியத்தின்
கடைசித் தீற்றலுக்குத் தெரியுமா
இதுதான் அவனது
கடைசித்தீண்டுதல் என?
அவனுக்குத் தெரியும்
அறமெனும் பிசாசுகளுக்குத் தெரியாது
வலி உணர்தலே மனிதம் என
* மயூரன் சுகுமாரனுக்கு
உன் கடைசி ஓவியத்தை?
உனது கடைசி ஓவியத்தின்
கடைசித் தீற்றலை உனக்குத் தெரியுமா?
பாப்லோ, நீ எழுதியிருக்கிறாயா உன்
கடைசிக் கவிதையை?
உனது கடைசிக் கவிதையின்
கடைசி வரியை உனக்குத் தெரியுமா?
குருதி சிந்தும் இதயமும்
அநாதரவான கருந்துளையுமே
அவனது கடைசி சாட்சி
கருணையைத் தானே இவன் யாசித்தான்
கடைசி ஓவியத்தின்
கடைசித் தீற்றலுக்குத் தெரியுமா
இதுதான் அவனது
கடைசித்தீண்டுதல் என?
அவனுக்குத் தெரியும்
அறமெனும் பிசாசுகளுக்குத் தெரியாது
வலி உணர்தலே மனிதம் என
* மயூரன் சுகுமாரனுக்கு
No comments:
Post a Comment