மாந்தை கிழக்கு பிரதேசசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தைச் சேர்ந்த சோதிராசா ஜெயசுதன் ஏராளமான பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி அதனை வீடியோக்களாக எடுத்து வைத்திருந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இதனால் குறித்த வீடியோக்களில் ஒரு வீடியோவில் ஜெயசுதனுடன் சேர்ந்திருந்த யுவதி தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு ஆதாரங்களுடன் செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தும் கூட்டமைப்பின் தலைமை குறித்த நபருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறைந்த பட்சம் அவரை பிரதேச சபை உறுப்பினர் பதிவியிலிருந்து கூட நீக்கவில்லை என அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
இவர் எடுத்து வைத்திருந்த 50ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் கைகளில் கிடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது ஜெயசுதன் தலைமறைவாகியுள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜெயசுதனை ஆவேசத்துடன் தேடிவருவதாகவும் தெரியவருகின்றது. வேலைவாய்ப்பு, காணி உறுதிப்பத்திரம் போன்றவை தருவதாகத் தெரிவித்தே ஜெயசுதன் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.
இப்படியானவர்களை கூட்டமைப்பு தம்மிடம் இணைத்து வைத்திருப்பதானது ஒட்டு மொத்த தமிழ் மக்களிடையே கடும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
பெண்களிடம் இவ்வாறு தவறாக நடக்கும் கயவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனையே பொருத்தமானது என்று அப்பகுதி மக்கள் அங்கலாய்கின்றனர்.
கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமா?
No comments:
Post a Comment