இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காணாமல் போன உறவுகளால்
கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எமக்கு தீர்வு கிடைக்காவிட்டால், சாகும் வரை உண்ணா விரதம் இருப்போம்: காணாமல் போனோரின் உறவுகள் ஆதங்கம்
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இன்று காணாமல் போனோர்களின் உறவுகளும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் முன்னெடுத்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இன்று மாலை 2 மணியளவில் முடிவுக்கு வந்தது.
பெருமளவான மக்கள் இங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.அங்கு வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு.துரைரட்ணம்,கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் மதகுரு மற்றும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் உண்ணா விரதம் இருந்த உறவுகளுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
அங்கு கருத்துத்தெரிவித்த மக்கள், தம் போராட்டம் இனியும் தொடருமெனவும் பல ஆண்டுகளாக கண்ணீரோடு உறவுகளை தேடி அலையும் எங்களுக்கு சரியான தீர்வை இந்த அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் அப்படி வழங்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதே வேளை தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக கொடும்பாவி எரிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு தங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சர்வதேசத்தையும் ஐ.நா.சபையையுமே தாம் நம்புவதாகவும் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லையெனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
















No comments:
Post a Comment