ஜனவசம முகாமையின் கீழ் இயங்கும் வட்டவளை மவுன்ஜித்
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு மாதத்திற்கான முற்கொடுப்பனவு சம்பளப் பணம் வழங்கப்படாமையினால் அம்மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
அதன்பின் பொலிஸாரின் தலையீட்டால் ஆர்ப்பாட்டகாரா்கள் கலைந்து சென்றனா். குறித்த முகாமையின் கீழ் இயங்கும் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் குற்றம் சுமத்தினர்.
ஒவ்வொரு மாதமும் இவ்வாறான ஒரு சம்பள பிரச்சினை ஏற்படுவதாகவும், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
|
No comments:
Post a Comment