புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அந்தந்த நாட்டின் பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர், இதில் அரசியல்
முக்கியாமான ஒன்று ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது அரசியல் வெற்றிகளை உறுதி செய்து எதிர்காலத்தை ஸ்திறப்படுத்தி வருகிறார்கள், நாட்டின் அரசியல் கொள்கை வகுப்பாக்கங்களில் மீதான தாக்கத்தை தமது அரசியல் பலத்தினூடாக வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவுஸ்திரேலியாவிலும் தமிழர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வருவது வரவேற்க தக்க ஒன்றே. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கான , மாநில பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் பங்குனி 28 ம் திகதி இடம்பெறுகிறது. இங்கே prospect என்று ஒரு தேர்தல் தொகுதி ஏறத்தாள 54000 வாக்களர்களை கொண்டது , இதில் தூங்காபி , பெண்டல்ஹில் , ஆகிய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்கள், கிட்டத்தட்ட 5000 தமிழ் பேசும் மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் ஒரு இளந்தமிழன் வேற்பாளராக களம் இறங்குகிறான், யார் அந்த தமிழன் ? சுஜன் செல்வன் , வயது 29 , யாழ்ப்பாணம் சாவச்சேரியை பிறப்புடமாக கொண்ட இவர் , வன்னி விசுவமடுவிலேயே வளர்ந்திருக்றார். 2000 ஆண்டு அகதியாக ஆஸி வந்த இவர் 2008 , 2009 யுத்த இறுதி காலப்பகுதியில் தனது 22 வது வயதில் வாய்ஸ் ஒப் தமிழ் என்னும் அமைப்பினை நிறுவி தமிழரின் போராட்டத்துக்கு வலு சேர்த்திருக்கின்றார் , விடுதலைப்போராட்டம் தொடர்பாக ஆஸி மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு இன்று வரை இவ்வமைப்பு இயங்கி வருகிறது. அத்தோடு மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்ட இவர் , அவுஸ்திரேலியா செல்லும் தஞ்ச கோரிக்கையாலர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.நீண்டகாலமாக ஆஸியில் ஈழத்தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஒரு கட்சியான கிரீன் கட்சியின் சார்பிலேயே சுஜன் போட்டி இடுகிறார். ஜந்து வருடங்களுக்கு மேலாக இக்கட்சியின் தொண்டராக இருந்த இவர் இப்போது வேற்பாளராக களம் இறங்கி இருக்கிறார். புலம்பெயர் தமிழரின் அரசியல் பிரவேசம் ஊடாகவும் வெளிநாடுகளின் கொள்கை வகுப்பில் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று திடமாக நம்பப்படும் இக்காலகட்டத்தில் ஆஸி தமிழரின் அடையாளமாக குரலாக இருக்கும் சுஜன் போன்றோரின் வெற்றி தமிழருக்கு அவசியாமான ஒன்றுதான்.

No comments:
Post a Comment