March 1, 2015

ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரி, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும்!

அவுஸ்திரேலியாவில் இயங்கும் அகதிகள் தொடர்பான செயற்பாட்டுக்குழு, கடந்த 23 ஆம் திகதி மெல்பேர்னில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாட பொதுக்
கூட்டம் ஒன்றை நடத்தியது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவை, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும் என சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் இரகசியங்கள் என்ற நூலை எழுதிய ட்ரவோர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரது 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.
தமிழ் பிரதேசங்களில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் தமிழ் பிரதேசங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது.
விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் அமுலில் இருப்பதுடன் ஆயிரக்கணக்கான தமிழ் கைதிகள் இரகசிய முகாம்களில் இருந்து வருகின்றனர்.
ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரி, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும்
 01.03.2015    

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் அகதிகள் தொடர்பான செயற்பாட்டுக்குழு, கடந்த 23 ஆம் திகதி மெல்பேர்னில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாட பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 வருடங்களாக அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவை, ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த கொலைகளில் இருந்து எப்படி விலக்கி வைக்க முடியும் என சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் இரகசியங்கள் என்ற நூலை எழுதிய ட்ரவோர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

மைத்திரிபால ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரது 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

தமிழ் பிரதேசங்களில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் தமிழ் பிரதேசங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது.

விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் அமுலில் இருப்பதுடன் ஆயிரக்கணக்கான தமிழ் கைதிகள் இரகசிய முகாம்களில் இருந்து வருகின்றனர்.தலைப்பு

No comments:

Post a Comment