March 28, 2015

ரணிலின் வாயை அடைத்த யாழ். ஆயரின் கேள்வி! பதில் கூறாமல் நழுவினார். (படம் இணைப்பு)!

யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.
இங்குள்ள நிலைமைகளை நன்கு அறிவீர்கள். உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.ஆயர் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஆயர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள். இங்குள்ள நிலைமைகளை நன்கு அறிவீர்கள். உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.ஆயர் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஆயர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணிலுக்கு இன்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் விசேட அதிரடிப் படைகள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே யாழ்.ஆயர் பிரதமரிடம் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் ரணில் பதில் எதுவும் கூறாது ஆயரிடம் இருந்து விடைபெற்றார்.

அதேவேளை, புதிய அரசு மக்களுக்கு நல்ல சேவையை செய்யும் என நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இதனூடாக முக்கியமான சில கோரிக்கைகளை பிரதமரிடம் ஆயர் முன்வைத்தார். மேலும் இவர்கள் இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது யாழ். ஆயர் ரணிலிடம், முதலில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்களை இழந்து நடுவீதியில் நிற்கிறார்கள் அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பது ,வாழ்வாதாரங்களை செய்து கொடுப்பது என்ற திட்டங்களை தாமதிக்காமல் உடனே செய்து தரவேண்டும்.

இரண்டாவதாக வளலாய் கத்தோலிக்க மக்கள் இடம்பெயர்ந்ததால் தேவாலயங்கள் ஒன்றும். இல்லை. எனவே அவர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயங்களை அமைத்து தரவேண்டும்.

அதற்கான இடங்களை பெற்றுத் தர வேண்டும். சில தேவாலயங்கள் இடிந்து போய் உள்ளன. அதனையும் மீளப் புனரமைத்துத் தரவேண்டும்.மூன்றாவதாக மீனவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.

நீண்டகாலமாக அவர்கள் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களது பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை மக்களின் முக்கியமான பிரச்சினை அதாவது காணாமற்போனவர்கள் எங்கு போனாலும் கண்ணீருடன் இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுத்து அவர்களுக்குரிய சுய உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் ஆயர் முக்கிய 4 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதற்கு பிரதமர் ரணில் பதிலளிக்கும் போது, ஆழ்கடல் றோலர் மீன்பிடியை மீனவர்கள் நிறுத்தினால் மீனவர் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க உதவ முடியும். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இளைஞர் அமைப்பினை ஏற்படுத்தி அவர்களுடன் உறவை வலுப்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் ரணில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக புதிய அமைப்புக்களை நிர்வகித்து அதனூடாக தீர்வை பெற்றுத்தர முனைப்பு காட்டுவோம்.

எனவே அனைவரும் பொறுமையாக இருங்கள் இதற்கான தீர்வை உடனே பெற்றுத் தரமுடியாது. கால அவகாசம் தாருங்கள் மக்களது பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் பிரதமர் ரணில் யாழ்.ஆயரிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment