யாழ் மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவதன் மூலம் உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்களெனத்தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து இன்று சனிக்கிழமை கலந்துரையாடினார்.
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. பொலிஸார் பாராமுகமாக உள்ளனர் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கு உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். விரைவில் யாழ். மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவுள்ளோம். இங்குள்ள இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைய நீங்கள் வழி செய்ய வேண்டும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment