இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் குறித்த அத்துமீறல்களினால் வடமாகாண மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி கூட்டு அறிக்கையினை தயாரித்து
இந்திய பிரத மர் நரேந்திர மோடியிடம் கையளிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சி எடுத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள் ளவுள்ள நிலையில் அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போதே மேற்படி அறிக்கையும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிகின்றது.
மேற்படி விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் க ட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த விடயத்தை அவர் உறுதிப்படுத்தியிருப்பதுடன் அந்த அறிக்கை வடமாகா ண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முழுமையாக மையப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், குறித்த அறிக்கையினை மீன வர்கள் தாங்களாகவே இந்திய பிரதமரிடம் கையளிப்பதற்கு ஏற்றவகையிலான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த முயற்சிகள் கைகூடாதவிடத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக அல்லது வடமாகாண முதலமைச்சர் ஊடாக அந்த அறிக்கையினை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை 13ம் திகதி இலங்கை வ ரும் இந்திய பிரதமர் 13ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதுடன் பின்னர் நாடாளுமன்றில் உரையினையும் நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில் 14ம் திகதி அனுராதபுர ம் செல்லும் பிரதமர் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கும்
யாழ்.மாவட்டத்திற்கும் செல்லும் பிரதமர் யாழ்.மாவட்டத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாகவு ம் அறிகின்றோம். மேலதிகமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகா ர அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் நாங்கள் மீள்குடியேற்றம், காணாமல்போனவர்களின் பிரச்சினைகள் மற்றும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
அதேபோன்று இந்திய பிரதமருடனான சந்திப்பின் போதும் தமிழ்மக்கள் தற்போதும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர் பாகவும், அதனால் தற்போதும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் நிச்சயமாக முழுமையான விபரங்களுடன் எடுத்துரைப்பதற்கு உள்ளவோம். என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஆட்சிமாற்றத்தின் பின்னான இந்திய மீனவர்களின் அ த்துமீறல்களினால் வடமாகாண மீனவர்கள் கடுமையான அதிருப்திக்கும், கோபத்திற்கும் உள்ளாகியிருக்கும் நிலையில் கூட்டமைப்பின் அறிக்கை கையளிக்கும் முயற்சிக்கு மீனவர் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment