ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் அருகில் உள்ள புறநகரான வெஸ்ட்மீட் பகுதியில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணை அடையாளம் தெரியாத மர்மநபர் கொடூரமான முறையில் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் ஐ.டி. துறையில் ஆலோசகராக பணியாற்றிவந்த பிரபா அருண் குமார்(41) இங்குள்ள பாராமட்டா பூங்கா வழியாக அவர் நடந்துவந்தபோது இந்த படுகொலை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் பூங்கா அருகே எப்போதும் முகாமிட்டிருக்கும் சில போக்கிரிகள் அவ்வழியே செல்பவரை மடக்கி பணம் பறிப்பது வழக்கம்.
நேற்றிரவு அவ்வழியே வந்த பிரபா அருண் குமார் மிக மோசமான கத்திக் குத்து காயங்களுடன் சாலையோரமாக ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்டு வழிப்போக்கர்களில் ஒருவர் அவசர உதவி மையத்துக்கு அளித்த தகவலையடுத்து, வெஸ்ட்மீட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
காயம் மிகவும் கொடூரமாக இருந்ததாலும், அவரது உடலில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வெளியேறி விட்டதாலும் சிகிச்சை பலனின்றி பிரபா அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலையைப் பற்றி யாருக்காவது ஏதேனும் பின்னணி தகவல்கள் தெரிந்திருந்தால் அதை போலீசாரிடம் பகிர்ந்து வழக்கின் விசாரணையில் உதவும்படி உள்ளூர் மக்களுக்கு பாராமட்டா பகுதி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment