March 7, 2015

ஈழத்திலும் தடைகளை தாண்டி தொடரும் நடைபயணம்!

காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு மற்றும் ஜ.நா அறிக்கையினை வெளியிடுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முள்ளிவாய்க்காலில் இருந்து புறப்பட்ட நடைபயணப்பேரணி இன்றிரவு பரந்தனை
வந்தடைந்துள்ளது.எனினும் பேரணியைச்சேர்ந்தவர்களை பரந்தன் சந்தியில் வைத்து காவல்துறையினரும் படையினரும் கெடுபிடிகளிற்கு உட்படுத்தப்படுத்தி கைது செய்ய முற்பட்ட வேளை மக்களது எதிர்ப்பினையடுத்து அம்முயற்சி தோல்வியடைந்துள்ளது.


முன்னதாக வீதிப்போக்குவரத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக இலங்கை காவல்துறை கைது செய்ய முற்பட்டது.இதையடுத்து அப்பகுதியினில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.தம்மையும் கைது செய்ய வலியுறுத்தி மக்களும் ஏ-9 வீதியை வழிமறிக்க முற்பட கைது முயற்சி கைவிடப்பட்டிருந்தது.


அதன்பின்னர் தொடர்ந்து அவர்கள் நடந்து பயணத்தை யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறிய வேளையில் பளைப்பகுதியில் நடப்பதற்கு விடாமல் காவல்துறையினர் சுற்றி வளைத்து நிலைகொண்டதையடுத்து தற்காலிகமாக அதே இடத்தினில் தங்கியுள்ள போராட்டகாரர்கள் காலை தமது நடைபயணத்தை தொடர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment