March 9, 2015

சீன ஆதிக்கத்தை குறைப்பதற்கு அதிகளவு உதவித் திட்டங்களை இலங்கையில் அறிவிக்க உள்ளார் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக இலங்கைக்கு இந்தியா கடனுதவிகளை வழங்கவுள்ளது. என இந்தியாவின் த எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த விஜயத்தின் போது படையினருக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இந்தியா உறுதிமொழிகளை வழங்கவுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே இந்தியா இதனை மேற்கொள்கின்றது.

இந்திய பிரதமர் ஒருவர் கடந்த 28 வருட காலப்பகுதியில் தனது தென்பகுதி அயல்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் மார்ச் 13 ம் திகதி இடம்பெறுகின்றது.

இலங்கையில் புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இந்தியா பொருளாதார ஓத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தும், முக்கியமாக இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திரவர்த்தக உடன்படிக்கையை பலப்படுத்த முயலும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னைய சீனா சார்பு ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டிருந்த இரு தரப்பு உறவுகளில் மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது.

முன்னைய அரசாங்கம் தடுத்துவைத்திருந்த முழுமையான பொருளாதார ஓத்துழைப்பு உடன்படிக்கையும் மோடிக்கும் இலங்கை தலைவர்களுக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரலில் காணப்படலாம்.

இரு நாடுகளின் வர்த்தக செயலாளர்களும் கடந்த வாரம் கொழும்பில் சந்தித்துள்ளதாகவும் அதன் போது வர்த்தகங்களை அதிகரிப்பது மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதற்கு பதில் இந்தியா இலங்கையின்உற்பத்தி துறையில் முதலீடு செய்வது குறித்து கவனம் செலுத்தும்.இந்தியாவின் முதலீடு இலங்கையின் ஏற்றுமதி திறனை அதிகரிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

இரு நாடுகளும் திருகோணமலை அமையவுள்ள 500 மெஹாவாட் மின்நிலையத்திற்கான இறுதி அனுமதியை வழங்குவது குறித்த நடவடிக்கைகளும் இடம்பெறலாம்.2012 ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்தியா இந்த மின்நிலையத்தை அமைக்கவுள்ளது. மோடி திரு கோணமலைக்கும் விஜயம் மேற்கொள்ளலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment