March 11, 2015

விடுதலைச் சுடர் பயணம் 35ம் முன்ஞ்சன் நகரை வந்தடைந்தது.!

விடுதலைச் சுடர் பயணம் தமிழர்களின் கரிநாளான ஸ்ரீலங்காவின் சுதந்திர தினமன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு பிரித்தானியா பிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளினூடாக பயணம் செய்து 28.02.2015
அன்று ஜெர்மனியின் முன்ஸ்டெர் (Münster) நகரை வந்தடைந்தது. இவ் சுடர் ஜெர்மனியின் பல நகரங்களினூடாக பயணம் செய்து 35ம் நாளான இன்று (10.03.2015) முன்ஞ்சன் (München)நகரை வந்தடைந்தது.
இன்று 10:30 மணியளவில் ஔக்ஸ்பூர்க் (Augsburg) நகரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட சுடர் முன்ஞ்சன் நகர மக்களிடம் கையளிக்கப்பட்டது. முன்ஞ்சனில் karlsplatzல் அகவணக்கத்துடன் விடுதலைச் சுடர் பயணம் ஆரம்பிக்கப்பட்டு நகர மையப்பகுதியூடாக பேரணியாக எடுத்து வரப்பட்டது. விடுதைச்சுடரை எடுத்துவரும் போது தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படும் இனப்படுகொலை பற்றியும் மறுக்கப்பட்டு வரும் நீதி பற்றியும் மக்களிற்கு ஒலிபெருக்கி மூலம் விளக்கப்பட்டது. அத்துடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. விடுதலைச் சுடர் பயணம் 7 கிலோமீட்டர் வரை பயணம் செய்து Münchener Freiheitடை வந்தடைந்தது. அங்கும் மக்களிற்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சுமார் 14:45 மணியளவில் விடுதலைச் சுடர் பயணம் யேர்மனியில் நிறைவுசெய்யப்பட்டு சுவிஸ் நாட்டு மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
யேர்மனி முன்ஞ்சனில் இருந்து எடுத்து வரப்பட்ட விடுதலைச் சுடர் சுவிஸ் நாட்டு St Gallen நகர மக்களிடம் 19:30 மணியளவில் கையளிக்கப்பட்டது. நாளை முதல் சுவிஸ் நாட்டில் விடுதலைச் சுடர் பயணம் நடைபெறவுள்ளதால் சுவிஸ் நாட்டு தமிழ் மக்கள் அனைவரையும் எழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.dcp2736767676 (2) dcp2736767676 (3) dcp2736767676 (4) dcp2736767676 (5) dcp2736767676 (6) dcp2736767676 (7) dcp2736767676 (8) dcp2736767676 (9) dcp2736767676 (10) dcp2736767676 (11) dcp2736767676 (12) dcp2736767676 (13)

No comments:

Post a Comment