February 16, 2015

இலங்கைக்கான நிதியுதவியை அதிகரிப்பது குறித்து புதுடில்லி அறிவிக்கவுள்ளது !

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய
விஜயத்தின்போது இலங்கைக்கான நிதியுதவியை அதிகரிப்பது குறித்து புதுடில்லி அறிவிக்கவுள்ளது.கொழும்பின் ஒரு மாத கால அரசாங்கத்துடன் நட்புறவை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது

ஜனாதிபதி சிறிசேன ஞாயிற்றுக்கிழைம தனது முதலாவது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றடைந்துள்ளார்.இந்திய பிரதமர், ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உத்தியோக ப+ர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார போட்டி நாடான சீனாவின் பக்கம் கொழும்பு சாய்ந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு இரு நாடுகளுக்கும் கிடைத்துள்ள வாய்ப்பாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்திற்கு குறியீட்டு ரீதியிலான மற்றும் குறிப்பிடத்தக்க பரிமாணங்கள் உள்ளன என்கிறார், புதுடில்லியை தளமாக கொண்ட ஆய்வகமொன்றின் சி பாஸ்கர்.

இலங்கை தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் சிறிசேனவின் முயற்சிகளும், சீனாவிற்கும் இலங்கைக்குமான நெருக்கம் குறித்த விடயங்களுமே இந்தியாவை பொறுத்தவரை அரசியல் பரிமாணம் கொண்டவை. இவற்றிற்கே தீர்வு காணப்படவேண்டும் என புதுடில்லி கருதுகின்றது என அவர் மேலும் குறிப்பிடுகி;ன்றார்.

பிராந்தியம் குறித்த இந்தியாவின் எண்ணங்களை முன்னெடுத்துச்செல்வதற்கு இலங்கையே பொருத்தமான நாடு எனவும் தெரிவிக்கும் அவர் இலங்கையிடம் வலுவான பொருளாதாரத்திற்கான சக்தியுள்ளது,இந்தியாவுடன் நட்புறவை ஈர்ப்பதன் மூலம் இலங்கையே பலனடையப்போகின்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் முதற்பகுதியில் 2005- 2010 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்பட்ட சிறந்த உறவினை மீண்டும் ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்கிறார் இலங்கையின் பிரபல இராஜதந்திரி தயான் ஜெயதிலக.

இதேவேளை இந்தியா இலங்கைக்கான நிதியுதவியை அதிகரிக்க கூடும் என இந்த விஜயத்துடன் பரீட்சயமான ஒருவர் தெரிவித்தார்.இந்தியா இலங்கையில் பல அபிவிருத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது, இதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 270 மில்லியன் டொலரில் 50000 வீடுகளை அமைக்கும் திட்டமும் காணப்படுகின்றது.

சீனாவின் முதலீடுகள் இலங்கைக்கு வரத்தொடங்கியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்துள்ள உறவுகள் குறித்து இந்தியா எச்சரிக்கையாகவுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து சீனா அலட்சியம் செய்தமையே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்தமைக்கான காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினரான சிறிசேன அரசியல் மற்றும் பொருளாதரா இணைப்பிற்கு ஆசியாவையே நாடுவார் என்கிறார் தயான் ஜெயதிலக.

அதேவேளை பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் மேற்குலகத்தின் பக்கம் திரும்பக்கூடும்.

சிறிசேனவின் முதல் விஜயம் இந்தியாவிற்கும், இரண்டாவது விஜயம் மார்ச் மாதத்தில் சீனாவிற்கும் இடம்பெறுவதும், அதேவேளை மங்களசமரவீர இந்தியாவிற்கும், பின்னர் வாசிங்டனுக்குமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.

இலங்கையின் சிறுபான்மை தமிழர்களை தேசிய மைய நீரோட்டத்திற்குள் கொண்டுவருதற்கு ராஜபக்ச தவறியதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

முதலாவது விஜயமென்பது எந்த திசையில் பயணிப்பது என்பதை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம், நாங்கள் குறிப்பிடத்தக்க பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கிறோம்,ஓப்பந்தங்களில் உடன்பாடுகளை எதிர்பார்க்கிறோம், நாங்கள் அனைத்து இலங்கையர்களும் ஐக்கியத்துடன் வாழும் அமைதியான, ஸ்திரமான இலங்கையையே விரும்புகின்றோம், இலங்கை அரசாங்கத்திற்கு முன்னைய பேச்சுவார்த்தைகளில் இதனை தெரிவித்துள்ளோம், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாணம் ஆகியவை முக்கியமான விடயங்கள் அவை குறித்து ஆராய்வோம் என்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சையத் அக்பருடின்.


No comments:

Post a Comment