February 27, 2015

மைத்திரியைப் பலப்படுத்தும் மேற்குலக சதியே ஐ.நா அறிக்கை பிற்போடப்பட காரணம்!

மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான நட்பினை புதுப்பித்துக்கொண்டதன் விளைவாக மைத்திரிபாலவின் கரங்களை மேலோங்கச் செய்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரிபால
சிறிசேன தலைமையிலான பலமான அரசு ஒன்றினை நிறுவும் மேற்குலக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக சமூகம் இதனை அடிப்படையாகக் கொண்டே ஐ.நா தனது அறிக்கையை வெளியிட வேண்டும் எனக்கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையினால் மார்ச் மாதத்தில் அறிக்கையினை வெளியிடமுடியாது போகும்பட்சத்தில் ஐ.நா நிபுணர்குழு இங்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும் என நாம் வலியுறுத்துவதோடு, றோம் சாசனத்திலும் இலங்கையை கையெடுத்திடவைக்கவேண்டும்.

செ.கஜேந்திரன்
பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

No comments:

Post a Comment