சாவகச்சேரி - சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செல்வராசா உதயராசா (வயது 34) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அவர் மீது திடீரென வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலையிலும் கையிலும் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment