February 19, 2015

ஜெனீவா வங்கிகளில் சுவிட்சர்லாந்து பொலிஸார் அதிரடிச் சோதனை!

வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ய உதவியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, ஜெனீவாவில் உள்ள HSBC வங்கி அலுவலகங்களில் சுவிட்சர்லாந்து பொலிஸார் அதிரடிச்
சோதனை நடத்தியுள்ளனர். HSBC வங்கியில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக 200 ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேரின் பெயர்ப்பட்டியலை “புலனாய்வு ஊடகவியலாளர்கள்’ என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்டது.
மேலும், ரூ. 7.40 இலட்சம் கோடி அளவுக்கு வரி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர் உள்ளிட்டோர் அடங்குவர் என்றும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு சுவிட்சர்லாந்து அரசுக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்தன.
இந்நிலையிலேயே ஜெனீவாவில் உள்ள HSBC வங்கி அலுவலகங்களில் சுவிட்சர்லாந்து பொலிஸார் புதன்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment