February 3, 2015

மக்கள் போராட்டத்திற்கு குறியீடாக விளங்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மீண்டும் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!!

மக்கள் போராட்டத்திற்கு குறியீடாக விளங்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மீண்டும் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என பிரித்தானிய தமிழ் மக்களுக்கான
அவசர வேண்டுகோள் ஒன்றை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையை வெளிப்படுத்த ஐக்கிய நாட்டின் கண்காணிப்பில் நிலத்திலும் புலத்திலும் பொதுசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் , மற்றும் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் பெப்ரவரி 4. ஆம் திகதி சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை ஈழத்தமிழர்களின் கரிநாளாக வெளிப்படுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவிருகின்றது .
அன்றைய நாளில் மாலை 4 மணிக்கு இல 10, Downing Street முன்பாகக் தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனீவா நோக்கிய மக்கள் போராட்டம் "விடுதலைச் சுடர் " ஆரம்பிக்கப்படவும் உள்ளது . காலத்தின் தேவை உணர்த்து தமிழீழ உணர்வுடன் பிரித்தானியா தமிழ் மக்கள், தமிழர் அமைப்புகள் , சங்கங்கள் அனைவரும் இக் கவனயீர்ப்பில் இணைந்து தமது தேசத்துக்கான கடமைகளை செய்ய முன்வரவேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET ) ஆகிய நாம் அழைப்பு விடுகின்றோம் .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் பங்கு அளப்பெரியது .அந்தவகையில் தமிழீழம் மலரும் வரை நாம் ஓயாமல் எமது விடுதலைக்காக போராட வேண்டியவர்களாக நிற்கின்றோம் .மக்கள் போராட்டமே ஒரு இனத்தின் போராட்டம் . அந்த ரீதியில் 4ஆம் திகதி நடைபெறவிருக்கும் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அனைத்துலகம் செவிமடுக்க ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)

No comments:

Post a Comment