ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டு வெளியேறி இன்றுடன் 66 ஆண்டுகள் ஆகிவிட்டது 1948-02-04 அன்று இலங்கைக்கு சுதந்திரம் கொடுப்பதாக கூறிவிட்டு வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டினை கொடிய கொள்ளைக்கார
ரைப்பொறுத்தவரைக்கும் ஒரு கரி நாள் சுதந்திரம் என்றால் என்னவென்றுகூடத்தெரியாத தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு எப்போது கிடைக்கின்றதோ அன்றுதான் அவர்களுக்கு சுதத்திர நாள். நாடற்றவர்களாக நாடோடிகளாக அலைந்துகொண்டிருக்கும் தமிழர்கள் எவ்வாறு இன்னொரு தேசத்தின்
சுதந்திரநாளை தாமும் கொண்டாடமுடியும் . இலங்கை ஒரே நாடு அது ஒரே தேசம் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று
ஊளையிட்க்கொண்டிருக்கும் சிலர் வேண்டுமானால் இன்றைய நாளை தமது சுதந்திரதினமாக கொண்டாடலாம் சிங்கக்கொடியைத்தூக்கிப்பிடித்து ஆட்டிக்கூட காட்டலாம் ஆனால் நெஞ்சிலே விடுதலை நெருப்பினை சுமந்துகொண்டு தன்மானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எந்த ஒரு தமிழனும் இதை தமது சுதந்திர தினம் என்று கொண்டாடமாட்டான் கொடிபிடிக்க மாட்டான் இது யாதார்த்தவாதிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்வோர்க்கும் சிங்களதேசத்துடன் இணக்க அரசியல் செய்துகொள்ள எத்தணிக்கும் சில சுயலாப கும்பலுக்கும் சுள் என்று சுடக்கூடும் அனால் இது நிதர்சனம் இதை இல்லை என்று மறுத்துச்சொல்ல இதயம் உள்ள எந்த ஒரு மனிதனாலுமே முடியாது.
ஊளையிட்க்கொண்டிருக்கும் சிலர் வேண்டுமானால் இன்றைய நாளை தமது சுதந்திரதினமாக கொண்டாடலாம் சிங்கக்கொடியைத்தூக்கிப்பிடித்து ஆட்டிக்கூட காட்டலாம் ஆனால் நெஞ்சிலே விடுதலை நெருப்பினை சுமந்துகொண்டு தன்மானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எந்த ஒரு தமிழனும் இதை தமது சுதந்திர தினம் என்று கொண்டாடமாட்டான் கொடிபிடிக்க மாட்டான் இது யாதார்த்தவாதிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்வோர்க்கும் சிங்களதேசத்துடன் இணக்க அரசியல் செய்துகொள்ள எத்தணிக்கும் சில சுயலாப கும்பலுக்கும் சுள் என்று சுடக்கூடும் அனால் இது நிதர்சனம் இதை இல்லை என்று மறுத்துச்சொல்ல இதயம் உள்ள எந்த ஒரு மனிதனாலுமே முடியாது.
இன்று தமிழர்களைப்பார்த்து சுதந்திரதினம் கொண்டாடுங்கள் என்று கூறும் ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்காலிலே படுகொலைசெய்யப்பட்ட எங்கள் உறவுகளுக்காக நாங்கள் கண்ணீர் சிந்தி கதறி அழுவதற்கு அனுமதிப்பார்களா? அழுவதற்குக்கூட அனுமதியில்லாதே தேசத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதத்திரம் ஏது? இல்லாத தேசத்தின் சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?
தமிழர்களும் இலங்கையின் குடிமக்களே!! என்று இதுவரைக்கும் ஆட்சிபீடத்திலும் அதிகாரத்திலும் இருந்தவர்கள் நினைத்திருந்தால் இன்று பல்லாயிரம் உறவுகளையும் பலகோடிரூபா பெறுமதியான சொத்துக்களையும் பறிகொடுத்துவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிமுகாம்களிலே கண்ணீருடன் கவலையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியதன் அவசியம் என்ன? உலகநாடுகளைப்பெறுத்தவரை இலங்கை என்பது ஒரு நாடாக இருக்கலாம் ஆனால் அங்கே வாழுகின்ற மக்களைப்பெருத்தவரை அது ஒரு நாடு அல்ல அங்கே வாழுகின்ற முக்கியமாக தமிழ் சிங்களம் என்ற இரண்டு இனங்களும் ஒருமைப்பாட்டுடனோ அல்லது ஒற்றுமையுடனோ இதுவரைக்கும் வாழவில்லை இனியும் வாழமுடியும் என்ற அறிகுறிகள் கூட தென்படவில்லை நாம் எல்லோருமே ஒருதாய் மக்கள் என்றும் நாம் எல்லோருமே இலங்கையர்கள் என்றும் கூறிக்கொள்பவர்கள். எல்லோருமே உன்மையாக தமிழர்களை சகோதரர்களாகவோ அல்லது இலங்கையின் குடிமக்களாகவோ நினத்திருந்தால் ஏன் தமிழர்கள் 30 ஆண்டுகளாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதன் அவசியம் என்ன?
இலங்கை என்பது ஒரு நாடு அல்ல.அங்கே வாழுகின்ற எல்லோருமே சகோதரர்கள் அல்ல. தமிழர்களாகிய நீங்கள் வேறு நாடு சிங்களவர்களாகிய நாங்கள் வேறு நாடு என்ற சிந்தனையினை ஒவ்வொரு தமிழனதும் தமிழிச்சியதும் அடிமனதிலே ஆழமாக பதிய வைத்தது இலங்கையின் ஆட்சியாளர்களும் சிங்களப்பேரினவாதப்போக்கினைக்கொண்டவர்களுமே! தமிழர்களின் வீடுகள்மீதும் வழிபாட்டுத்தலங்கள் மீதும் பாடசாலைகள் மீதும் வீமானங்களால் குண்டுகளைவீசியும் எவுகணைகளால் தாக்கியும் ஈவு இரக்கம் இன்றி அழித்தவர்கள் எவ்வாறு நாம் எல்லோரும் ஒருதாய் மக்கள் என்று கூறமுடியும்!
எங்கள் சகோதரிகளை கதறக்கதற கற்பழித்து படுகொலை செய்தவர்களை எவ்வாறு எங்களின் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்? எந்தக்கொடியினை பிடித்துவந்து எங்கள் தேசத்தினை சுடுகாடாக்கினார்களோ! எந்தக்கொடியினைப்பிடித்தபடி விமானங்களில் பறந்து வந்து குண்டுகளை வீசினார்களோ! எந்தக்கொடியினை ஏற்றுவதற்க்காக எங்கள் மண்ணை ஆக்கிரமித்தார்களோ! அந்த கொலைவாளேந்திய சிங்கக்கொடியினை தமது தேசியக்கொடியாக எப்படி தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அதை கைகளியாலே தொடுவதற்கும் அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருக்காதா? சிங்கக்கொடியினைக்காணும்போதெல்லாம் எங்கள் அடி வயிறு பற்றி எரியாதா இதுவா எமது தேசியக்கொடி எம் தேசத்தை
சுடுகாடாக்கியகொடி இதனை வீடுகளில் ஏற்றி சுதந்திரதினம் கொண்டாட எந்த ஒரு தமிழனால் முடியும் உலகநாடுகளினால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் பிரபாகரன் என்ற ஒரு தலமையின் கீழே நின்மதியாகவும் சுதந்திரமாகவும் சுயமரியாதையுள்ள
மனிதர்களாக வாழ்ந்த எம்மை சர்வதேசத்தின் உதவியுடன் வீழ்த்தி பல்லாயிரம் உயிர்களைப்பறித்து மனிதகுலத்துக்கெதிரான ஒரு கோழைத்தனமான இன அழிப்பினை திட்டமிட்டு செய்து எத்தனையோ பெண்களை விதவைகளாக்கி எத்தனையோ பிள்ளைகளை அனாதைகளாக்கி எங்கள் மண்ணையும் மக்களையும் ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் தமிழர்களை நாடற்றவர்களாக்கி அகதிகளாக உலகெங்குமே அலைய வைத்துவிட்டது வீடற்றவர்களாக நாடற்றவர்களாக அலைந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நாடு எது?சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள எம் தேசம் இன்னும் விடுதலை பெறவில்லை எமது நாடு இன்னமும் சுதந்திரம் அடையவில்லை எனவே எமக்கேது சுதந்திர தினம்
உன்மையிலே தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக நினைத்திருந்தால் பயங்கரவாதத்தடைச்சட்டம் என்றும் அவசரகாலச்சட்டம் என்றும் கூறி பல்லாயிரம் அப்பாவித்தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கமாட்டர்கள் தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்களாக உன்மயாகவே சிங்களதேசம் நினைத்திருந்தால் கொழும்பிலே தங்கியிருந்த வடக்கு கிழக்கைச்சேர்த்த தமிழர்கள் 2007 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்டிருக்கமாட்டார்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் அடைக்கப்படிருக்கமாட்டார்கள் தமிழர்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்று சிங்களதேசம் நினைத்திருந்தால் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலே சிங்களதேசத்தின் தலைநகரிலே வங்கிகளில் கூட கணக்குகள் ஆரம்பித்துக்கொள்ளவும் தொலைபேசிக்கான சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் வடகிழக்கை சேர்ந்தவர்களுக்கு தடை என்ற ஒரு சட்டத்தினை விதித்திருக்குமா?
மன்னிக்கவோ மறக்கவோ முடியாத அநீதிகளை தமிழர்களுக்குச்செய்தசிங்களதேசம் இன்று மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவதை உணர்வுள்ள பாதிக்கப்பட்ட எந்த ஒரு தமிழனானும் ஏற்றுக்கொள்ள முடியாது .சுதந்திரம் கேட்டோம் என்பதற்காக சுட்டுத்தள்ளப்பட்டோம் விடுதலை கேட்டோம் என்பதற்காக விறகுகள் போல தறிக்கப்பட்டோம் உரிமைகளைக்கேட்டோம் என்பதற்காக விடியாத சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டோம் எதைச்சொல்வது எப்படிச்சொல்வது சிங்களதேசத்தால் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் கொஞ்சமா இதையெல்லாம் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது இதையெல்லாம் இறக்கும்வரை மறக்கவும் முடியாது.
சுதந்திரம் என்பது இரங்கிகொடுப்பதோ அல்லது இரந்து கேட்பதோ அல்ல அது எல்லோருக்கும் பொதுவானது சமனானது ஆனால் அதை சிங்களதேசம் தமக்கு மட்டும் சொந்தமானதாகவும் ஏதோ தாம் இரங்கி தமிழர்களுக்கு பிச்சையாக கொடுப்பதைப்போல பாசாங்குசெய்து திரை மறைவிலே பல நாசகாரவேலைகளை செய்துகொண்டிருக்கின்றது தமிழ் மண்ணை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சிசெய்யும் சிங்களதேசத்திடம் இருந்து எமது மண்னும் மக்களும் விடுதலை பெறும் நாள் அதுவே எமது சுதந்திர நாள். எமது கோரிக்கைகளும் எமது விடுதலைப்போராட்டமும் எப்போது வெற்றிபெறுகிறதோ அதுவே எமது சுதந்திர நாள். எமது மன்ணை ஆக்கிரமித்துள்ள கொடிய் இரானுவம் எப்போது நிரந்தரமாகவெளியேறுகின்றதோ எப்போது வடக்கு கிழக்கு இணைந்து எமக்கென்று ஒரு தனியரசு உருவாக்கப்படுகின்றதோ எப்போது எமது தியாகங்களும் விடுதலைப்போராட்டமும் வெற்றிபெறுகின்றதோ அப்போது தமிழினத்தின் தேசியக்கொடியினை ஏற்றி சுதந்திர நாளினை கொண்டாடுவோம் அதுவரை எமக்கு பெப்பரவரி 04 கரிநாளே!
No comments:
Post a Comment