எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை
கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல்
பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை
தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில்
வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை
தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர்
பங்கெடுத்திருந்தனர்.
எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நடத்தியிருந்தனர்.
இதனிடையே மாவட்டமொன்றிற்கு தலா மூன்று மில்லியன் ரூபாவென கூட்டமைப்பிற்கென பிரச்சாரத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட கொடுப்பனவுகள் பிரச்சார வேகத்தை முன்னிறுத்தி வழங்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment