யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக அனுமதிக்கப்பட்ட
வாகனங்களைத் தவிர ஏனையவை செல்ல அனுமதிக்க
முடியாது என யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்ட வாக்குகளை எண்ணும் நிலையமாக இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் மத்தியகல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக போக்குவரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பாதையின் ஊடாக அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர ஏனையவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் வேம்படி வீதி, முதலாம் குறுக்குத்தெரு வீதி, சுப்பிரமணியம் பூங்காவீதி மற்றும் கல்லூரியின் முன், பின் வீதிகளும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment