January 4, 2015

பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் பிரசார நடவடிக்கை நாளை(05.01.2015)  நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறவுள்ளது.


இதற்கமைய நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எவ்வித பிரசார நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக 55 சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை நள்ளிரவுக்கு பின்னர் சட்டவிரோதமாக ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக விசேட திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

No comments:

Post a Comment