January 6, 2015

மஹிந்தவுடன் பேசி காணிகளை விடுவிப்பாராம்! சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வென்றால் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கதைத்து தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இதே வேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற விதத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இனவாதக் கட்சிகள் இதுவரை காலமும் அங்கம் வகித்தமையால் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க முடியவில்லை. அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு ஏற்ற அளவில் இராணுவத்தினரை வடக்கில் இருக்கவிட்டு, மிகுதி இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்றவும் முடியும்' என்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயம் என்பதனால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment