முல்லைதீவு விசுவமடுப்பகுதியில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில்
மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார்.
விசுவமடுச்சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.
கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலர் அவரை பேசவிடாது மேடையிலிருந்து இழுத்து வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து கனகரத்தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்ப காலப் போராளி செல்லக்கிளியின் சகோதரரென முகவுரை வழங்கப்பட்டதாகவும் அப்போதே தியாகத்தை தந்த குடும்பத்திலிருந்தே துரோகம் செய்வதாக கூறியே தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகள், மீளக்குடியமர்ந்த மக்கள், தொண்டர் ஆசிரியர்களென பலரும் படையினரால் பலாத்காரமாக இப்பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையினிலேயே கனகரத்தினம் முல்லைதீவு மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment