January 24, 2015

யார் இந்த மைத்திரி ?

பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951ஆம் ஆண்டுஇ செப்டெம்பர் 3ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட
குடும்பத்தில் பிறந்தார். � உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்தி ரிபால சிரிசேன விவசாயத்துறையில் நாட்டம் இருந்தமையால் 1973ஆம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.
அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத் தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். � மாணவர் பருவத்தி லேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன, 1970களில் இறுதியில் அந்தக் கட்சியில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார். இதனால் கட்சியின் பிரதேச அரசியல் குழுக்களில் அங்கம் வகித்தார். � அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார். இதில் 1982 ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலை வராகவும் பின்னர் கட்சியின் மத்திய குழுவிலும் உறுப்பினரானார். � இதனை அடுத்து கட்சி மீது இவருக்கு இருந்த விசுவாசத்தை அடுத்து சுதந்திரக்கட்சி சார்பில் நாடா ளுமன்ற தேர்தலில் இறங்கினார் 1989ஆம் ஆண்டு, தனது 38ஆவது வயதில் பொலன்னறுவை மாவட்டத் திலிருந்து நாடாளுமன்ற உறுப்பின ராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அதன்பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிரிசேன. � பின்னர், சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 1994ஆம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரி பால, மூன்று ஆண்டுகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சிகண்டார்.
பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற இவர், 2004ஆம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார். � அதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த­வின் தலைமைக் காலத்திலும் அதே பதவி நிலையில் நீடித்துவந்த மைத்திரி பால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். � அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமைதாங் கிய இவர், 4 ஆண்டுகளுக்கு முன் னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத் தின்படி, சுகாதார அமைச்சராக பதவி ஏற்றார்.
விடுதலைப் புலிகளுடனான போர் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலை யில் பெண்ணொருவரால் நடத்தப் பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து மைத்திரி பால சிரிசேன உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment