முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர்
கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில், லம்போகினி சொகுசு பந்தயக் கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற ஆணையுடன் நேற்றுக்காலை காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இது மகிந்த ராஜபக்சவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அவர், தற்போதைய அரசாங்கத்தினால் தாமும் தனது ஆதரவாளர்களும் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,
என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
அரசியல் வாழ்வில் முதல் முறையாக எனது வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்கள் நடக்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தே புதிய அதிபருக்கு வாக்களித்துள்ளனரே தவிர, தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பழிவாங்குவதற்காக அல்ல.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment