January 2, 2015

யாழ்ப்பாணத்தின் முக்கிய கொள்ளைக் கோஸ்டி தலைவரை அரவணைத்தார் மைத்திரி!

யாழ்ப்பாணத்தில் முக்கிய கொள்ளைக் கோஸ்டித் தலைவனாக இருந்து பல இடங்களிலும் கொள்ளையடித்து பொலிசாரால் வீதி வழியே இழுத்துச்
செல்லப்பட்ட யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரான விஜயகாந் தற்போது மைத்திரியுடன் சோ்ந்துள்ளார்.
தனது கைகளில் கறைகள் கிடையாது என்ற போகுமிடமெல்லாம் பெருமை பேசும் ஜனாதிபதி வேட்பாளா் மைத்திரிபாலசிறிசேன தற்போது குடாநாட்டின் பச்சைக் கள்ளனாக இருக்கும் ஒருவனை அரவணைத்துள்ளது மைத்தியின் கள்ளத்தனத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.
குறித்த விஜயகாந் 2010ம் ஆண்டு தொடங்கி 2012ம் ஆண்டு வரை யாழ் குருநகருக்கு அருகில் வீடு ஒன்றை எடுத்து அதில் சிங்களப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் விஜயகாந் வங்கி ஒன்றில் நகைகளை அடகு வைக்கச் சென்ற சமயம் குறித்த வங்கியில் பணி புரிந்து வந்த பெண்ணின் தாலிக் கொடியும் அந்த அடகுப் பொருளில் இருந்துள்ளது.
குறித்த வங்கி ஊழியரின் வீட்டில் பாரிய கொள்ளை நடந்து சிறிது காலத்தின் பின்னரே இந்த பொருள் அடைவுக்கு வந்துள்ளது. கொள்ளை நடந்த சமயம் குறித்த வங்கி ஊழியரான பெண் சுன்னாகம் வங்கியில் கடமை புரிந்ததாகவும் அதன் பின்னா் பிரதான வீதியில் இருந்த வங்கிக்கு இடமாற்றம் பெற்றதாகவும் தெரியவருகின்றது.
இதனை அறியாத விஜயகாந் வங்கியில் அடைவு வைத்த போது கோப்பாய் பொலிசாரால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை விசாரித்த பொலிசார் விஜயகாந் பாரிய கொள்ளைக் குழுவின் தலைவன் என அடையாளம் கண்டு நீதிமன்றில் விஜயகாந்தை ஆயா்ப்படுத்தி சிறைக்கு அனுப்பினா்.
அரசியலில் ஈடுபட்ட அவாவில் தானும் ஒரு தனிக் கட்சியை அமைத்து சில நகைச்சுவை வேலைகளைச் செய்து வந்தார். அவரது கட்சி ஆதரவாளா்களாக குறைந்தது பத்துப் பேராவது இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இந் நிலையில் ஜனாதிபதி தோ்தல் வந்தவுடன் தான் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு அளிக்கப்பபோவதாக ஊடகங்களில் தெரிவித்துவிட்டு அரச தரப்பைச் சோ்ந்த முக்கியானவா்களுடன் தொடா்பு கொண்டு தனக்கு 52 மில்லியன் ரூபாக்கள் தரும்படியும் தன்னிடம் ஏராளமான தொண்டா்கள் இருக்கின்றார்கள் என தெரிவித்தும் பில்டப் காட்டியுள்ளார்.
விஜயகாந் கொள்ளைக் குழுவின் தலைவாக இருந்தவன் என்ற காரணத்தாலும் பெரிதாக எந்த மக்கள் ஆதரவும் இல்லாத காரணத்தாலும் விஜயகாந்தை தமது பக்கம் எடுத்து தமக்குத் தாமே சேறு புச விரும்பவில்லை அரச தரப்பு.
இதனையடுத்து விஜயகாந் யாழ் மாட்ட ஐ.தே.க கட்சி எம்.பியான விஜயகலாவின் பிரத்தியோக செயலாளரை சந்தித்து பேரம் பேரி மைத்திரியுடன் இணைந்துள்ளார்.
கள்ளனைச் சோ்ந்து கறை படிந்துள்ள மைத்திரியின் வாக்கு வாக்கு வங்கி விஜயகாந்தினால் என்ன நிலைக்கு உள்ளாகும் என்பது வாக்களிக்கப் போகும் பொதுமக்களுக்குத்தான் வெளிச்சம்.

No comments:

Post a Comment