லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர்
நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ்
தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாளாகும்.
லெப் கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.
சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கைவகுப்பாளனுமாகிய கப்டன் கஜனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.
உன்னத இலட்சியத்துக்காக லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கஜனும் எம்மை விட்டுப் பிரிந்து 18 ஆண்டுகள் ஓடிக்கழிந்துவிட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி இம்மாவீரர்களின் பயணம் தொடர்கிறது.
இவர்களின் ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க ஆதாரமாய் அமையும். இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும். அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம். எனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதோடு நாமும் உறுதியெடுத்துக்கொள்வோமாக.

No comments:
Post a Comment