September 8, 2014

முள்ளிவாய்க்கால் முடிவல்ல , ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்- நாள் 4 !!

புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் வலிகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம்
.எமது தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்து  ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம் .


அவ் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை இனவாத அரசுக்கு பல்வேறு பக்கங்கள் ஊடாகவும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன.ஐநா மனிதவுரிமை அலுவலகம் விசாரணைக்குழுவின் ஊடாக தமிழின அழிப்புக்கு சாட்சிகள் சேகரிக்க ஆரம்பித்துள்ளது .

இலங்கையின் வெளியுறவு தொடர்பு சொந்த நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தாலும், பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்திகளை மெல்ல வெளியிட ஆரம்பிக்கின்றன.எது எவ்வாறு இருப்பினும் எமது விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது .ஆதலால் நாம் எம்மை பலப்படுத்தும் வகையில் எமது தார்மீக அரசியல் போராட்டத்தை வலுப்படுத்துவோம் . 
கடந்த 15.09.2014 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  EU Brussels முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் ஐநா திடல் நோக்கி இன்று மாலை  நான்காவது நாளில் யேர்மன்  நாட்டை சென்றடைந்தது .யேர்மனியில் சார்புருக்கன் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நகர மத்தியில் தமிழ் மக்கள் ஈருருளிப்பயணவீரர்களை வரவேற்க உள்ளனர் .
சந்திப்பு நடைபெறும் இடம் : Galeria Kaufhof
இன்றைய பயண வழி மிகுந்த காட்டுப் பிரதேசமாக இருந்தாலும் மாவீரர்களின் நினைவோடு ஈருருளிப்பயணத்தை திரு குணம் மற்றும் மக்ஸ் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.ஈருருளிப்பயணத்தின் இறுதி நாளான 15.09.2014 அன்று  ஐநா  முன்றலில் மாபெரும் எழுச்சி நிகழ்வு இடம்பெறும்.

எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம். எதிர்வரும் 15.09.2014 அன்று நாம் அனைவரும் ஓங்கி குரல் கொடுப்போம், அதனை தொடர்ந்தும் ஓயாமல் உழைப்போம். இறுதி மூச்சு எமது உடலில் இருக்கும் வரை உறுதி தளராமல் தமிழீழம் என்றே உச்சரிக்கட்டும்.






--
Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு
www.twitter.com/tamilvan

No comments:

Post a Comment