யாழ்ப்பாணம்
கொடிகாமம் கச்சாய் பகுதியினில் இனந்தெரியாத ஆயுதபாணிகள் இன்று அதிகாலை
நடத்திய தாக்குதலில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை வேளை தமது முகம்களை கறுப்பு துணிகளினால் மூடி கட்டியவாறு அவர்களது வீட்டினுள் புகுந்தவர்கள் வாள்களால் வெட்டியுள்ளனர்.கொள்ளைக்கு அவர்கள் வந்திருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற போதும் அவர்களது நடவடிக்கை அவ்வாறிருக்கவில்லையென காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கு.சிவபாக்கியம்(வயது 59) மற்றும் அவரது மகளான கு.தர்சினி(வயது 24) ஆகிய இருவரே வாள் வெட்டினில் படுகாயமடைந்துள்ளனர்.அயலவர்களால் மீட்கப்பட்ட அவர்கள் சாவகச்சேரி வைத்திய சாலையினில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment