August 9, 2014

புதிய சாட்சியங்களா? கூட்டமைப்பிடம் தாருங்களென்கிறார் சுமந்திரன்!

ஊடகவியலாளர்கள் மீதும் அரச சார்பற்ற அமைப்புக்கள் மீதும் கெடுபிடிகளை அமுல்படுத்துவதன் மூலம் போர்க்குற்றவிசாரணைகளை குழப்பி
விடலாமென அரசு நினைக்கின்றது. ஆனால் அது வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இரகசியமாகவும் திட்டமிட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளவர்களை இலக்கு வைத்தே விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இறுதிப்போர் தொடர்பில் இதுவரை வெளிவராத சான்றுகள் ஏதுமிருப்பினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக அதனை உரிய இடத்தினில் சேர்ப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவினர் மேற்கொண்டுவரும் விசாரணையை நாம் வரவேற்கிறோம். அந்த குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதுவரையில் மின் அஞ்சல் முகவரி ஒன்று மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அது வெறுமனே சமர்ப்பணங்களை அனுப்பவே மட்டுமே.இலங்கையிலுள்ள சாட்சியாளர்களது நிலை தொடர்பாக ஜ.நா அறிந்துள்ளது.தமக்கு இலங்கையிலிருந்து சாட்சியமளிப்பவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.

விசாரணையாளர்கள் துல்லியமாக விசாரணைகளை ஆரம்பித்துவிட்டனர்.தமது முதலாவது அறிக்கையினை எதிர்வரும் செப்டெம்பரிலும் இறுதியினை மார்ச்சிலும் சமர்ப்பிக்கவுள்ளது.தமக்கு தேவையான மேலதிக விபரங்களிற்கே அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் யுத்த காலத்தினில் அவசரகால சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தினில் ஆற்றிய உரைகளை சாட்சியமாக அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
கம்போடியாவினில் 30 வருடங்களிற்கு பிறகே படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விசாரணை குழு அமைப்பு உள்ளிட்ட பலவற்றினில் எமது பிரச்சினையில் ஒரளவிற்கு வேகமாக நகர்வுகள் நடப்பதால் நாம் நம்பிக்கையுடன் இருப்போமெனவும் கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment