August 9, 2014

சிகிற்சை பெற்று வீடு திரும்பிய பல்கலைக்கழக மாணவனும் கைது! நான்காம் மாடியில் தடுத்து வைப்பு!

காயமடைந்து நிலையில் மருத்துமனையிலிருந்து சிகிற்சை பெற்று வீடு
திரும்பிய சப்ரகமுவ பல்கலைகழக சமூக விஞ்ஞான மொழியியல் கற்கை பீடத்தில் கற்கும் கிளிநொச்சி முகமாலையைச் சேர்ந்த சுதர்சன் இன்று பலாங்கொடைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை சக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment