August 24, 2014

டென்மார்க்கில் கரும்புலிகள் நினைவான உதைபந்தாட்ட போட்டி!

டென்மார்க்கில் தமிழர் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட 21ம் ஆண்டு கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டக் கிண்ணம் 2014 போட்டி நடைபெற்றுள்ளது.

டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 21 ஆவது ஆண்டாக 23.08.2014 அன்று
சிறப்பாக நடைபெற்றது.
டென்மார்க்தேசியக்கொடியுடன்தமிழீழத்தேசியக்கொடியும்ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவுகல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுமலர் வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது .

இச்சுற்றுப்போட்டியில் நோர்வேயில் இருந்து 5அணிகளும் சுவிடனிலிருந்து 1 அணியும் மற்றும் டென்மார்க் அணிகளுமாக மொத்தம் 18 அணிகள்கலந்துகொண்டன.
1ம்இடம்: …….. Drammen Tsk நோர்வே
2ம்இடம்: ………Sønderborg டென்மார்க்
3ம்இடம்:……………….OTSC டென்மார்க்
சிறந்தவீரர்:…...;பிரவீன் ரஞ்சித்குமார் Sønderborg டென்மார்க்.
சிறப்புபந்துகாப்பளர்…...ரஞ்சிதன் Drammen Tsk நோர்வே
இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதி நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடி இறக்கத்தோடு
தமிழர்களின் தாரக மந்திரத்தை தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் உரக்கச் சொல்லி நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.



No comments:

Post a Comment