August 25, 2014

தமிழர்தாயகம் ஒரு தேசம் என்றவகையில் ஈழத்தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்!!


தமிழ்நாட்டு அரசாங்கத்துடனும் தமிழகமக்களுடனும் ஈழத்தமிழர்கள் ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாடு ஒன்றை கொண்டிருக்காத போதும் ஒரு தேசியம் என்ற அடிப்படையில் வெளியுறவுகொள்கை
ஒன்றை முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகாரங்களுக்கும் ஆட்சிகளுக்கும் உட்பட்ட தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது காலத்தின்கட்டாயம் ஆகின்ற
உலக அரசியல்நிலை மாறிவருகின்ற நிலையில் தமிழகத்துடன் ஈழத்தமிழர்கள் ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இந்தியாவை பொறுத்தவரை காங்கிரஸைவிட பாரதீய ஜனதாக்கட்சி தேசியத்துவத்துடன் கூடியவகையில் தமிழர் பிரச்சினையை பார்க்கிறது.
இந்தநிலையில் தமிழ்நாட்டு அரசாங்கத்துடனும் தமிழகமக்களுடனும் ஒத்துழைப்புகளை ஈழத்தமிழர்கள் அதிகரித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக உருவாக்கப்படும் ஈழத்தமிழர்களின் வெளியுறவுக்கொள்கை அடிப்படையில் தமிழகத்தினூடாகவே இந்திய மத்திய அரசை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் அணுகவேண்டும் என்று செய்தி ஒன்றிற்கு கருத்துரைத்துள்ள, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment