August 25, 2014

இந்திய அரசாங்கம் எதிர்காலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது - அரியநேந்திரன் !

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களைப் போன்றல்லாது, இந்திய அரசாங்கம் எதிர்காலத்தில் சில யுக்திகளுடன் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்தியஅரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்திய அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசிவிட்டு வந்தால் வடகிழக்கில் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமா என்ற கேள்வி இருக்கின்றது.
இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசியது. ஆனால், தொடர்ச்சியாக ஏமாற்றத்தை நாங்கள் கண்டுகொண்டு இருக்கின்றோம். இப்பொழுது வந்துள்ள மோடி அரசாங்கம், முதற் தடவையாக பதவியேற்று இருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசிவிட்டு வந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் சில யுக்திகளை அல்லது மாற்றங்களை எமக்குத் தர இருக்கின்றது.

No comments:

Post a Comment