லைக்காவின்ராஜபக்சேவின் கூட்டாளி மற்றும் பினாமியான சுபாஸ்கரனின் லைக்கா
நிறுவனம், கத்தி படத்தை தயாரிப்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள்
எழுந்தன. சென்ற வாரம் 60-க்கும் மேற்பட்ட கட்சிகள்
அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினர். இதன் காரணமாக கத்தி படத்தை முருகதாஸின் கீழ் உள்ள பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு கைமாற்றி விட விஜய்யும் முருகதாசும் முயற்சித்தனர்.
அப்பொழுது தான் லைக்காவின் முழு சுயரூபமும் வெளியாகியுள்ளது.
கத்தி படத்தில் நடிக்கும் விஜய்க்கும், இயக்குனர் முருகதாசுக்கும் பலகோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இருவருமே இதுவரை வாங்காத சம்பளம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதன் காரணமாகத் தான் முருகதாஸ், லைக்கா நிறுவனத்திடம் கத்தி படத்தை தயாரிக்கும் பொறுப்பை அளித்ததாக கூறப்படுகின்றது.
அதே வேளையில் லைக்கா நிறுவனம் “படத்தின் முழு உரிமையும் எங்களுக்கு தான். இடையில் எந்த பிரச்சனை காரணமாகவும் நாங்கள் விலக மாட்டோம், நீங்களும் படத்தை உரிய நேரத்தில் பிரச்சனையில்லாமல் முடித்துக்கொடுக்கவேண்டும்” என ஒபந்தம் போட்டுள்ளனர். அப்பொழுது இந்த ஒப்பந்தத்தின் வீரியத்தை அறியாத முருகதாசும் விஜய்யும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்திருந்திருந்த லைக்கா முதலாளிகள் சுபாஸ்கரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் விஜய்யிடம் படத்தில் யார் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் அல்ல, ஒப்பந்தத்தை மறந்து விட்டீர்களா” என கடுமையாக எச்சரித்துள்ளனர் .
லைக்கா முதலாளிகள் சுபாஸ்கரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தற்போது பாதுக்காப்பான ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.
மேலும் லைக்கா நிறுவனம் கத்தி படத்தில் இருந்து விலகவில்லை என்பதை உறுதிப்படுத்த தான், நேற்று கத்தி படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் தமிழ் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களை கொதிப்படைய
செய்துள்ளது. கத்தி படம் கைமாறிவிட்டது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியாகும் என எதிர்பார்த்த அனைவருக்கும் நேற்று ஏமாற்றமே மிஞ்சியது. கத்தி
படம் கைமாறவில்லையெனில் கண்டிப்பாக பலத்த எதிர்ப்புகள் வெடிக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை.
அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினர். இதன் காரணமாக கத்தி படத்தை முருகதாஸின் கீழ் உள்ள பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு கைமாற்றி விட விஜய்யும் முருகதாசும் முயற்சித்தனர்.
அப்பொழுது தான் லைக்காவின் முழு சுயரூபமும் வெளியாகியுள்ளது.
கத்தி படத்தில் நடிக்கும் விஜய்க்கும், இயக்குனர் முருகதாசுக்கும் பலகோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இருவருமே இதுவரை வாங்காத சம்பளம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதன் காரணமாகத் தான் முருகதாஸ், லைக்கா நிறுவனத்திடம் கத்தி படத்தை தயாரிக்கும் பொறுப்பை அளித்ததாக கூறப்படுகின்றது.
அதே வேளையில் லைக்கா நிறுவனம் “படத்தின் முழு உரிமையும் எங்களுக்கு தான். இடையில் எந்த பிரச்சனை காரணமாகவும் நாங்கள் விலக மாட்டோம், நீங்களும் படத்தை உரிய நேரத்தில் பிரச்சனையில்லாமல் முடித்துக்கொடுக்கவேண்டும்” என ஒபந்தம் போட்டுள்ளனர். அப்பொழுது இந்த ஒப்பந்தத்தின் வீரியத்தை அறியாத முருகதாசும் விஜய்யும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்திருந்திருந்த லைக்கா முதலாளிகள் சுபாஸ்கரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் விஜய்யிடம் படத்தில் யார் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் அல்ல, ஒப்பந்தத்தை மறந்து விட்டீர்களா” என கடுமையாக எச்சரித்துள்ளனர் .
லைக்கா முதலாளிகள் சுபாஸ்கரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தற்போது பாதுக்காப்பான ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.
மேலும் லைக்கா நிறுவனம் கத்தி படத்தில் இருந்து விலகவில்லை என்பதை உறுதிப்படுத்த தான், நேற்று கத்தி படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment