ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு இணைந்த இளஞர்கள் தற்போது விடுமுறையில்
வீடுகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் தாங்கள் ஆமி என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண்பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர். இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் குறித்த ஸ்ரீலங்கா ஆமி இளஞர்களை கண்டித்தனர்.
அதனையடுத்து ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் இளஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டே இந்த சனசமூக நிலையம் உடைக்கப்பட்டதுடன் தளபாடங்களும் பொருட்களும் சேதமாக்கப்பட்டன. மேலும் தங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், தாங்கள் இராணுவம் தங்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயங்களை பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment