சிறீலங்கா அரசின் படை இணையதளத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இது தமிழ்நாட்டு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தமிழக நடிகர்கள்– இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சிறீலங்கா அரசின் இந்த இழிசெயலை கண்டித்தும் சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை!
தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்!
இவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை வைத்துக் கொண்டு, ஒரு பந்தலில் அமர்ந்திருந்தனர் திரையுலகப் பிரமுகர்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment