கடந்த 16-01-2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து சிலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டவரான கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும் ஊற்றுப்புலத்தை வதிவிடமாக
கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் பூதவுடல் நேற்று (02-08-2014 ) கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு ஏழு மாதங்களுக்கு பின்னா் கொண்டு வரப்பட்டு இறுதி பிாிகைகள் இடம்பெற்றது.
கடந்த வருடம் ஜுன் மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி, பளையை சொந்த இடமாகவும், ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்திரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள், கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்தியுள்ளனா் இதன் போதே கேதீஸ்வரன் அவா்கள் உயிாிழந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments:
Post a Comment