August 10, 2014

யாழில் தமிழ் மன்னர் சிலைகளை ஒட்டுக்குழு டக்ளஸ் திறந்துவைப்பது கண்டனம்!

தமிழினத் துரோகியும் சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடியும் தமிழ் மக்களை விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்துபவரும் ஒட்டுக்குழுத்
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இன்று மூன்று தமிழ் மன்னர்களில் சிலைகளைத் திறந்துவைக்கவுள்ளமை குறித்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவன்னியன், எல்லாளன், பரராசசேகரன் ஆகிய சிறந்த மன்னர்களின் சிலைகளை டக்ளஸ் திறப்பதற்கே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்தச் சிலைகளை ஒரு தமிழன் திறந்தாலே அது பெருமைக்குரிய விடயம். ஆனால் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உரிமையை நசுக்குகின்ற டக்ளஸ் திறப்பது எந்த தமிழனாலுமே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈ.பி.டி.பியின் பிடிக்குள் இருக்கின்ற யாழ்.மாநகர சபையின் பதவிக் காலம் முடிவடைகின்ற நிலையில் அவசர அவசரமாக இந்த மாநகர சபை யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மூன்று வீதிகள் சந்திக்கின்ற முக்கோணத்தில் மூன்று மன்னர்களின் சிலைகளை அமைப்பதற்கு முயன்று தற்போது சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்படவுள்ளன.
ஐரோப்பியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மண்டியிடாமல் இறுதிவரை உறுதியாக நின்று களமாடிய பண்டாரவன்னியன், எல்லாளன், பரராசசேகரன் ஆகிய மூன்று மன்னர்களின் சிலைகளுமே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை வீரம் என்றால் என்ன என்று தெரியாதவரும் மேற்படி வீர மன்னர்களுக்கு முற்றிலும் எதிர்மாறாகச் செயற்பட்டு தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்தவருமான டக்ளஸ் தேவானந்தா திறந்துவைப்பதற்கு உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment