வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
காதல் விவகாரங்களே இதற்கு அதிகளவில் காரணாமாக இருக்கிறது. காதல் விவகாரங்கள் தொடர்பில் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசும் போது,
புத்தகக் கல்வி மூலம் மட்டுமன்றி, சமூகம் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கல்வியினால் மட்டும் தான் ஒரு ஒழுக்கத்துடன் கூடிய மாணவச் சமூகம் உருவாகும். ஒழுக்கம் இன்றி கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அது எவருக்கும் பயனளிக்காது.
கல்வியைப் பெறும் போது அவதானத்துடன் கற்க வேண்டும். இல்லையேல் உங்களது குறிக்கோளை அடைய முடியாது கல்வி கற்கும் போது ஒரு குறிக்கோளுடன் கற்க வேண்டும். உங்களுடைய குறிக்கோளில் தடை ஏற்படுமாயின் அது பெற்றோரையே பாதிக்கும்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் 5 மில்லியன் மாணவர்களில் வடமாகாணதைச் சேர்ந்த தமிழ் மாணவன் ரமேஷ் அதிக புள்ளிகளைப் பெற்று நாட்டிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்த்தான். அதே போல நீங்களும் கல்வியை சீராகப் பெறவேண்டும் என அரியநேத்திரன் தெரிவித்தார்.
-மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசும் போது,
புத்தகக் கல்வி மூலம் மட்டுமன்றி, சமூகம் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கல்வியினால் மட்டும் தான் ஒரு ஒழுக்கத்துடன் கூடிய மாணவச் சமூகம் உருவாகும். ஒழுக்கம் இன்றி கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அது எவருக்கும் பயனளிக்காது.
கல்வியைப் பெறும் போது அவதானத்துடன் கற்க வேண்டும். இல்லையேல் உங்களது குறிக்கோளை அடைய முடியாது கல்வி கற்கும் போது ஒரு குறிக்கோளுடன் கற்க வேண்டும். உங்களுடைய குறிக்கோளில் தடை ஏற்படுமாயின் அது பெற்றோரையே பாதிக்கும்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் 5 மில்லியன் மாணவர்களில் வடமாகாணதைச் சேர்ந்த தமிழ் மாணவன் ரமேஷ் அதிக புள்ளிகளைப் பெற்று நாட்டிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்த்தான். அதே போல நீங்களும் கல்வியை சீராகப் பெறவேண்டும் என அரியநேத்திரன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment