July 25, 2014

நளினி வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு! -

35(1ஏ) சட்டப்பிரிவை நீக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நளினி உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்றும், குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி 435(1ஏ) சட்டப்பிரிவு கூறுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சி.பி.ஐ வழக்குகளில் குற்றவாளியை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும், குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும் 435(1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் நளினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

No comments:

Post a Comment