சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.நீதிமன்றத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமானோர் வாயை கறுப்புத் துணியால் கட்டியபடி கலந்துகொண்டனர்.
யாழ். பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ். நீதிமன்ற முன்றிலைச் சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் யாழ். நூலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.
"பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்", " சட்ட அமுலாக்கம் எங்கே அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே? " பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி நீதி கோருகிறோம்”, " நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா?", " எனது வேதனை உனக்கு புரியவில்லையா? ", " எனது மகள் மைதிலியின் கொலைகாரனைக் கண்டு பிடியுங்கள்" போன்ற வாசங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தேக நபர்களை புகைப்படம் எடுக்கவிடாது கடற்படையினர் அட்டகாசம் யாழ்.காரைநகர், களபூமி கிராமத்தில் கடற்படையினரால் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த யாழ்.ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்து கடற்படையினர் மற்றும், படைப் புலனாய்வாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
கடந்தவாரம் காரைநகர் களபூமி பகுதியில் 11 வயது மற்றும் 9 வயது பாடசாலை சிறுமிகளை கடற்படையினர் கபடத்தனமாக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று சுமார் 11தினங்களாக குறித்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர்.
இவ்விடயம் வெளிவந்துள்ள நிலையில் கடற்படைக்கு எதிராக யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் இரண்டாம் தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றுக்கு செய்தி சேகரிப்பதற்காக குடாநாட்டின் ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது அங்கு வந்த கடற்படையினர் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்ததாக கூறி புகைப்படக் கருவிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்து, அதிலிருந்த விடயங்களை பார்த்துள்ளனர்.
இதன் பின்னர் சக ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று அவர்களுடன் பேச முனைந்தபோது அனைவரும் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் நின்ற பகுதிக்கு முன்பாக வாகனம் ஒன்றை நிறுத்திவிட்டு, மறுபக்கமாக மற்றொரு வாகனத்தை கொண்டுவந்து, அதில் சந்தேக நபர்களான கடற்படைச் சிப்பாய்களை ஊடகவியலாளர்கள் பார்க்காதவாறு தவழ்ந்து வாகனத்தில் ஏறுமாறு கூறி ஏற்றிச் சென்றுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதிக்கு மேலதிகமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு அங்கே நின்றிருந்த ஊடகவியலாளர்கள் கடற்படையினரால் கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுக்கப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறு கடற்படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்கள் தமது அட்டூழியங்கள் வெளியே தெரியாத வண்ம் பார்த்துக் கொள்வதற்காக ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுக்கும் சமப்வங்கள் நடந்து கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment