கிளிநொச்சி திருவையாற்றில் வசித்துவந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு இரண்டு
மாதங்கள் ஆகின்ற நிலையிலும் விடுதலையுமில்லை அவ்விளைஞனைச் சென்று பார்ப்பதற்கும் உறவினர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசித்துவந்த கிருஸ்ணராசா சிறீதரன் வயது-26 என்னும் இளைஞன் கடந்த 30.05.2014 அன்று அவர் வசித்த திருவையாறு வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார் அவர் ஏன் எதற்குக் கைதுசெய்யப்பட்டார் என்னும் வடயம் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.
ஆனால் மேற்படி கி.சிறீதரன் என்னும் இளைஞனுக்கு பெற்றோர் உறவினர் எவரும் இல்லை என்றும் அவர் யாருமற்ற நிலையில் திருவையாற்றிலுள்ள அவருக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டில் வசித்துவந்ததாகக் கூறப்படுகின்றது.
இவர் பிரச்சனைகள் அற்ற அமைதியானவர் என்றும் இவர் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்பது தெரியாமல் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர் கடந்த 23.05.2014 அன்று கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தநாள் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் அதன் பின்னர் ஏழு நாள் கழித்து திருவையாற்றில் அவர் வசித்த வீட்டில் வைத்து 30.05.2014 அன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவருக்கு உறவினர்கள் தற்சமயம் இல்லாதமையால் இவர் தொடர்பில் சென்று கதைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தற்போது எவரும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.


No comments:
Post a Comment