இலங்கையில் மனித உரிமை நிலைவரம் குறித்து பிரிட்டன் கவலை தெரிவித்து வரும் அதேவேளை, இலங்கைக்கான அந்த நாட்டின் ஆயுத ஏற்றுமதியில் அதீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என பிரிட்டனின் நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களில் 614 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என பிரிட்டனின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அரசிடம் அதன் நாடாளுமன்றக் குழு விளக்கம் கோரியுள்ளது. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உட்பட பலவகையான ஆயுதங்களுக்கான ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதற்கான காரணங்களை தெரியப்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் பிரிட்டனின் நாடாளுமன்றக் குழு விளக்கம் கேட்டுள்ளது

No comments:
Post a Comment