July 25, 2014

கிறிஸ்மஸ்தீவில் பெண்கள், குழந்தைகளின் நிலை மோசம்!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின், குறிப்பாக தாய்மார் மற்றும் பிள்ளைகளின்,
நலன்கள் பற்றி தீவிர கவலை கொண்டுள்ளதாக அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோரும் பிள்ளைகள் பற்றிய தேசிய மட்ட விசாரணையின் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் தலைவி கில்லியன் ட்ரிக்ஸ் கடந்த வாரம் கிறிஸ்மஸ் தீவிற்கு சென்றிருந்தார். தாம் நான்கு மாதத்திற்கு முன் சென்ற போது இருந்த நிலைமை இன்று மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறதென பேராசிரியர் ட்ரிக்ஸ் அம்மையார் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளில் பெரும்பாலும் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்களாக மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் படுக்கையை நனைக்கிறார்கள். சிலருக்கு பேச்சாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். கிறிஸ்மஸ் தீவில், 174 பிள்ளைகள் அடங்கலாக 1,102 புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர். தமது கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களை பேட்டி கண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment