பிரித்தானியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஈழத்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை கைது செய்து, நாடுகடத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் இந்த வேலைத்திட்டத்துக்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கான சலுகைகளையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை கைது செய்து, நாடுகடத்துவோம் என்று நேற்றையதினம் பிரதமர் கமரூன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment