கடந்த 25ம் திகதி ஊடகப் பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும், அவர்களது ஊடகப் பணியை
முடக்கும் நோக்கிலும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தினுள் கஞ்சா பொதியை வைத்து பொய்க்குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு இராணுவத்தினர் சதிமுயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி சம்பவத்தினை கண்டித்து நாளை நண்பகல் 12.00மணி தொடக்கம் யாழ் பஸ்நிலையப்பகுதியில் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு-தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் இப்போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களையும் பெருமளவில் கலந்து கொண்டு ஊடகங்கள்
மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாத செயற்பாட்டை கண்டிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

No comments:
Post a Comment