மாகாண மட்ட கிரிக்கெட் போட்டியில் மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் 7 ஆவது தடவையாக 1 ஆவது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்.
குறித்த வீரர்களை கௌரவிக்கும் முகமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தனது பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியில் இருந்து குறித்த அணியில் உள்ள ஒவ்வெறு வீரர்களுக்கும் துவிசசக்கர வண்டியினை பெற்று அன்பளிப்பாக வழங்கினார்.
-குறித்த வீரர்களை கௌரவிக்கும நிகழ்வு நேற்று சனிக்கிழமை(14) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
-இதன் போது கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வீரர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி கௌரவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட கிரிக்கட் சம்மேலனத்தின் தலைவர் ஜி.எல்.பிகிராடோ உற்பட கிரிக்கட் சம்மேளன அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment